நீலகிரிமாவட்டம் குன்னூர் அருகே பள்ளிகளுக்கான மண்டலஅளவிலான விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் 61 வது மண்டல அளவிலான  தடகள போட்டி குன்னூர் அருகேயுள்ள வெலிங்டன் எம்.ஆர்.சி.தங்கராஜ் மைதானத்தில் நடைபெற்றது.இந்த போட்டிகளில் கோவை மண்டலத்தை சேர்ந்த குன்னூர் , கூடலூர், கோவை, பொள்ளாச்சி ஆகிய 4 கல்வி மாவட்டத்தை சேர்ந்த 100 பள்ளிகளிலிருந்து 400 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

3 ஆண்டுகளுக்கு பிறகு நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் 14, 17, 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். விளையாட்டு போட்டியை நீலகிரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நசுருதீன் தொடங்கி வைத்தார். போட்டியில் 100, 200, 400 ,600, 800, 1500 , 3000 , 5000 மீட்டர் கொண்ட தொடர் ஓட்ட பந்தயம் நடைபெற்றது.110 மீட்டர், மற்றும் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டி 80 மீட்டர் தடை தாண்டும் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் ஈட்டி எறிதல்உட்பட போட்டிகள் நடத்தப்பட்டன.

முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் ரொக்க பரிசுகளும்வழங்கப்பட்டன.