கோழிமராடா பகுதியில் நடராஜ் என்பவரை கரடி தாக்கியது

சோலூர்மட்டம் கிராமத்தில் வசித்து வரும் திரு. நடராஜ் என்பவரை இன்று (25.10.2018) காலை 6.15 மணியளவில் கோழிமராடா பகுதியிலுள்ள அவரது தேயிலை தோட்டத்தில் கரடி தாக்கியதில் அவருக்கு கை, கால் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. அவருக்கு கோத்தகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிக்சைகாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.