வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு (ஸ்டிக்கர்) வழங்கப்பட்டது

கல்லட்டி மலை பாதையில் செல்லும் வெளி மாவட்ட, மாநில வாகனங்கள் சாலை விதிகளை பின்பற்றாமல் வேகமாக மலை பாதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன . எனவே கல்லட்டி மலை பாதையில் இறங்குவதற்கு வெளி மாநில , மாவட்ட வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
 
உள்ளுர் வாகனங்கள் செல்ல தடையேதும் இல்லை என்ற போதிலும்
வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களை அனுமதிப்பதில் சிரமம் ஏற்பட்டது மேலும் கல்லட்டி , மசினகுடி போன்ற பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டது . எனவே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களை அடையாளம் காணும் வகையில் உள்ளூர் வாகனங்களுக்கு நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பாக அடையாள அட்டை (ஸ்டிக்கர்) வழங்கப்பட்டது.
நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முக பிரியா அவர்கள் இன்று வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு அடையாள அட்டை (ஸ்டிக்கர்) வழங்கினார்.
 
நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகப்ரியா அவர்கள் கூறுகையில் இந்த அடையாள அட்டை (ஸ்டிக்கர்) ஒட்டிய வாகனங்கள் உள்ளூர் வாகனம் என்று அடையாளம் காணப்பட்டு இப்பாதையில் அனுமதிக்கப்படும் என்றும் வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட உள்ளூர் வாகனங்களுக்கு அதன் உரிமையாளர்கள் தங்களின் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் தங்கள் வாகனத்தின் ஆர்.சி. புத்தக நகல் மற்றும் ஓட்டுனர் உரிமத்தை காண்பித்து அனுமதி அட்டையை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்தார்.