கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்து அறுக்கபட்ட நிலையில் பெண் இறப்பு

கோத்தகிரியில் மர்மமான முறையில் கழுத்தறுத்த நிலையில் பெண் இறப்பு மற்றும் அவரது மூன்றரை வயது மகனும் கழுத்தறுபட்ட நிலையில் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

கரூரை சார்ந்த ராஜேஷ்குமார் கோத்தகிரியை சார்ந்த லோகேஸ்வரியை 5 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு கார்த்திகேயன் என்ற மூன்றரை வயது மகன் உள்ளான். தற்போது ராஜேஸ்குமார் சௌவுதியில் பணி புரிந்து வருகிறார். இதனால் லோகேஸ்வரியும், மகன் கார்த்திகேயனும் கோத்தகிரியில் உள்ள ரோஸ் காட்டேஜ் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

இன்று இரவு லோகேஸ்வரியை பார்க்க அவரது பெற்றோர் வந்துள்ளனர். அப்போது வீட்டின்  கதவு பூட்டபட்டு இருப்பதை கண்ட அவர்கள் சந்தேகம் அடைந்து பின்புறம் சென்று பார்த்துள்ளனர். அப்போது லோகேஸ்வரி கழுத்து அறுக்கபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதையும் பேரன் கார்த்திகேயன் கழுத்து அறுக்கபட்ட நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து உடனடியாக கோத்தகிரி போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போலிசார் சிறுவனை மீட்டு சிகிச்சைகாக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து லோகேஸ்வரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள கோத்தகிரி போலிசார் மோப்ப நாய் உதவியுடன் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.