72வது காலாட்படை தினம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரி , ரெஜிமென்ட் சென்டரில் 72வது காலாட்படை தினம் கொண்டாடப்பட்டது.

போர் நினைவு தூண் பகுதியில் இராணுவ அணிவகுப்பு நடைபெற்றது . போரில் உயிர் நீத்த இராணுவ வீரர்களுக்கு இராணுவ பயிற்சி கல்லூரி தலைவர் , பிரிகேடியர் மற்றும் இராணுவ அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.