24 மணி நேரத்தில் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஒரு பெண்ணையும் அவரது நான்கு வயது மகனையும் கொடூரமான முறையில் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயன்றதில் அந்த பெண் மட்டும் உயிரிழந்தார் , நான்கு வயது மகன் உயிருக்கு போராடிய நிலையில் கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மருந்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வழக்கு பதிவு செய்து கொலையாளியை போலீசார் தேடி வந்தனர் . விசாரணையில் கொலையாளி ஈரோடுக்கு தப்பி சென்றது தெரிய வர தப்பிச்சென்ற கொலையாளி கௌரிசங்கர் என்ற வாலிபரை நீலகிரி காவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா அவர்களின் உத்தரவின் பேரில் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் பாலசுந்தரம், துணை ஆய்வாளர் நசீர், கௌதம், மாவட்ட தனி பிரிவு காவலர்கள் பிரேம்நாத், திலக் ஆகியோர் அடங்கிய நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு 24 மணி நேரத்தில் கொலையாளியை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.