உதகை அரசு கலைக் கல்லூரியில் சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்தநாளை (31.10.2018 புதன் அன்று) தேசிய ஒருமைப்பாட்டு தினமாக கொண்டாடினர்

இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதலின்படி சர்தார் வல்லபாய் பட்டேல் அவர்களின் பிறந்தநாளை தேசிய ஒருமைப்பாட்டு தினமாக பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசத்தின் ஒற்றுமை ஒருமைப்பாடு தேசத்தின் பாதுகாப்பு தேசத்தின் அமைதி ஆகியவற்றிற்கு வலுசேர்க்கும் வகையில் இவ்விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் 3,000 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு மனித சங்கிலி அமைத்தனர் மேலும் பல்வேறு மதங்களைச் சார்ந்த மத தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றி சமாதானத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் வகையில் பேசினார்கள்