கோடப்பமந்து கால்வாய் தூர் வாரும் பணி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

உதகை கோடப்பமந்து கால்வாய் தூர் வாரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று காலை நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா அவர்கள் அதிகாரிகளுடன் தூர் வாரும் பணி நடைபெறும் பகுதிகள் மற்றும் மத்திய பேருந்து நிலைய பகுதிகளுக்கு சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.