ஹோட்டல் ஜெம் பார்க்கில் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பு

டிசம்பர் 25 ம் தேதி இயேசு கிருஸ்து பிறந்த தினத்தை உலகமெங்கிலும் வெகு விமர்சையாக கொண்டாடும் பண்டிகை கிறிஸ்துமஸ். நீலகிரி மாவட்டத்திலும் அனைத்து தரப்பு மக்களால் கிறிஸ்துமஸ் கொண்டாடபடுகிறது. டிசம்பர் மாதம் முழுவதும் உதகை விழா கோலம் பூண்டிருக்கும், பூபாள பாடல் குழுவினர் வீடுகள் தோறும் வந்திருந்து பாடல்கள் பாடுவது, கிறிஸ்துமஸ் தாத்தா வருகை என பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் மாதம் டிசம்பர்.
கிறிஸ்துமஸ் விழாவில் மிக முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் கேக். கிருஸ்துமஸ் கேக் செய்வதையே ஒரு விழாவாக ஊட்டியில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் கொண்டாடுவார்கள். அந்த கேக் தயாரிப்புக்கான பொருட்களை பதப்படுத்தும் பணி இன்று (1.11.2018) உதகை ஜெம் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.
கிருஸ்துமஸ் கேக் தயாரிக்க உலர் பழங்கள், முந்திரி, பாதாம் மற்றும் ஒயின் போன்ற பொருட்கள் கலக்கப்பட்டு ஒரு மாதம் பதப்படுத்தப்பட்டு பின் கேக் தயாரிக்கப்படும். இன்று ஜெம் பார்க்கில் அதன் ரெசிடென்ஷியல் இயக்குநர் இஸ்மாயில் கான் அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஜெம் பார்க் பணியாளர்கள் , சுற்றுலா பயணிகள், செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டனர்.