மஞ்சக் கொம்பையில் காட்டு பன்றி இறைச்சியை விற்பனை செய்த ராஜேஷ்குமார் கைது

உதகை குந்தா சரகம் மஞ்சக் கொம்பையில் காட்டு பன்றி இறைச்சியை விற்பனை செய்த ராஜேஷ்குமார் என்பவர் கைது .

இறைச்சியை வாங்கிய கருப்பசாசி, சதீஷ்குமார், மீனாட்சி சுந்தரம், ரமேஷ் ஆகிய ஐந்து பேர்களை வனத்துறையின் கைது செய்தனர் அவர்களிடமிருந்து 5 கிலோ காட்டு பன்றியின் இறைச்சி பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களின் காரும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் அவர்களை கூடலூர் நீதிபதி முன் ஆஜர் செய்தனர். அவர்களை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். 5 பேரும் உதகை சப்- ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

குந்தா சரகம் பெங்கால் மட்டம் மணிகண்டி பகுதியில் மின் கம்பி அறுந்து இரண்டு காட்டு எருமைகள் மீது விழுந்ததில் இரண்டு காட்டு எருமைகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மின் துறைக்கு தகவல் தெரிவித்து மின் இணைப்பை துண்டித்து காட்டு எருமைகளின் உடலை மீட்டனர் . பின் கால்நடை மருத்துவர் கண்ணன் அவர்கள் பிரேத பரிசோதனை செய்தார்.