உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கிவைத்தார்

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு உதகை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து விழிப்புணர்வு பேரணி உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையம் வரை நடைபெற்றது. பேரணியை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

முன்னதாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் கழிப்பறை தூய்மை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது. மேலும் மத்திய பேர்ந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள மதில் சுவர்களில் கழிப்பறை பயன்பாடு அவசியம் குறித்து வரையப்பட்டுள்ள விழிப்புணர்வு சுவர் ஓவியங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்.