பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடிகர் விவேக் அவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் சின்ன கலைவானர் நடிகர் விவேக் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி குழந்தைகள், சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். சுற்றுலா பயணிகள், பள்ளி குழந்தைகளுக்கு பிளாஸ்டிக் பைகளுக்கு பதில் துணிபைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா, தோட்டகலைத்துறை இணை இயக்குனர்திரு. சிவசுப்ரமணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி. கீதாபிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் திரு. பாபு, நகராட்சி ஆணையாளர் திரு. நாராயணன், நகராட்சி பொறியாளர் திரு. ரவி, அரசு அலுவலர்கள் மற்றும் பள்ளி மாணவ / மாணவிகள் சுற்றலா பயணிகள் பலர் கலந்துகொண்டனர்.