நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக நடிகர் விவேக் அவர்கள் கலந்து கொண்ட மாபெரும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு நிகழ்ச்சி

நீலகிரி மாவட்ட உதகை சேரிங்கிராஸ் பகுதியில் நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பாக சின்ன கலைவாணர் நடிகர் விவேக் அவர்கள் கலந்து கொண்ட மாபெரும் சாலை பாதுகாப்பு மற்றும் தலைகவச விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தலைகவசம் அணிந்து வந்தவர்களுக்கு நடிகர் விவேக் ரோஜா மலர் மற்றும் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா, மாவட்ட காவல்கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா, காவல் ஆய்வாளர்கள் மற்றும் பள்ளி மாணவ ஃ மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.