முதுமலை சாலை நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 2 காட்டு யானைகள்

முதுமலை சாலை நடுவே ஆக்ரோஷமாக சண்டையிட்ட 2 காட்டு ஆண் யானைகள். வாகனங்கள் செல்ல முடியாமல் பாதிப்பு .சுற்றுலா பயணிகள் கண்டு வியப்பு.

கூடலூரை அடுத்துள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் புலி, கரடி, யானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வன விலங்குகள் அதிகமாக உள்ளன. இந்த வன விலங்குகளை காண ஆயிரகணக்கான சுற்றுலாப் பயணிகள் முதுமலைக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை முதுமலை ஒடுவே செல்லும் சாலை ஓரத்தில் 2 காட்டு ஆண் யானைகள் சுமார் அரை மணி நேரம் ஆக்ரோஷமா சண்டையிட்டது. இதனால் இந்த சாலையை கடக்க முடியாமல் சாலை போக்குவரத்து பாதிப்படைந்தது.

சுமார் அரை மணி நேரம் சண்டை தொடர்ந்த நிலையில் ஒரு யானை பின் வாங்கியதால் சண்டை முடிவுக்கு வந்தது.

அந்த சாலையில் வாகன நெரிசலில் இருந்த வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்த சண்டையை அச்சதொடு பார்த்து சென்றனர்.