லவ்டேல் பகுதியில் கரடி நடமாட்டம்

லவ்டேல் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதை கண்டதாக அப்பகுதி மக்கள் வனத்துறையினரிடம் அச்சம் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் அப்பகுதியில் தேடிய போது கரடி நடமாட்டத்தை காணவில்லை. இருந்த போதிலும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி காவல் மற்றும் வனத்துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.