வினோத் என்னும் சுற்றுலா பயணி பைக்கார அணையில் மூழ்கி உயிரிழந்தார்

ஆந்திரா மாநிலம் நெல்லூர் பகுதியை சார்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர் உதகைக்கு சுற்றுலா வந்துள்ளனர். இந்நிலையில் இவர்கள் 6 பேரும் காலையிலிருந்து உதகையை சுற்றி பார்த்த பின்னர் மதியம் பைகாரா அணைக்கு சென்றுள்ளனர்.

பைகாரா அணை செல்லும் வழியில் பைகாரா அணைக்கு செல்லும் தண்ணீரில் குளிக்க செல்லும் போது வினோத் என்பவர் நிலைதடுமாறி நீரில் முழ்கியுள்ளார். வெகு நேரமாகியும் வினோத் மேலே வராததால் அச்சம் அடைந்த நண்பர்கள் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் பைகாரா காவல் துறையினர் வினோத்தின் உடலை சடலமாக மீட்டனர். இது தொடர்பாக பைகாரா காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்