Ooty Riders Club சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு பயணம்

உதகையிலிருந்து கன்னியாகுமரி வரை பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் Ooty Riders Club சார்பில் #GREENTOURISMRIDE(#RidetoSaveNature) இருச்சக்கர வாகனத்தில் பிரச்சார பயணத்தை #வெங்கடேஷ்வரன்#கார்த்திகேயன்#மார்க்மற்றும் #முரளி ஆகிய நான்கு பேர் மேற்கொண்டுள்ளனர். இன்று (26.12.2018) உதகையில் தங்களது பயணத்தை தொடங்கி

#ஊட்டி – திண்டுக்கல்
#திண்டுக்கல் – தேவகோட்டை
#தேவகோட்டை -தனுஷ்கோடி
#தனுஷ்கோடி – திருச்செந்தூர்
#திருச்செந்தூர் – கன்னியகுமாரி
#கன்னியகுமாரி – கோவலம்
#கோவலம் – குற்றாலம்
#குற்றாலம் – திண்டுக்கல்
#திண்டுக்கல் – ஊட்டி

கடலோர மாவட்டங்களில் தங்களது பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். 6 நாட்கள் (26.12.2018 – 31.12.2018) பயணம் மேற்கொள்ளும் இவர்கள் நமது நீலகிரி மாவட்டம் பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாறி வருவதையும், அதில் நம் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்பு குறித்தும், நம் மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் எனவும் பிரச்சாரத்தில் வலியுறுத்த போவதாக தெரிவித்துள்ளனர்.