ரூ.48.20 இலட்சம் மதிப்பில் நுண் உரம் செயலாக்கி மையம்

உதகை நகராட்சிக்குட்பட்ட காந்தல் முக்கோணம் பகுதியில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ் ரூ.48.20 இலட்சம் மதிப்பில் இரண்டு டன் கொள்ளளவுள்ள நுண் உரம் செயலாக்கி மையத்தினை திறந்து வைத்து, இம் மையத்தில் தினமும் குப்பைகளை துகள்களாக மாற்றி தொட்டிகள் மூலம் பதப்படுத்தப்பட்டு 42 நாட்களில் உரமாக்கப்படும் எனவும், மேலும் இதே போல 6 இடங்களில் நுண் உரம் செயலாக்கி மையம் கட்டப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் உதகை சட்டமன்ற உறுப்பினர் திரு.கணேஷ், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு, மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.அர்ஜூணன், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்