1000 பயனாளிகளுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழா

          நீலகிரி மாவட்டம்  உதகை பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று (29.12.2018) தமிழக அரசின் சார்பில் சமூக நலத்துறையின் மூலமாக ஏழைப்பெண்களுக்கு திருமண நிதியுதவியுடன் திருமாங்கல்யத்திற்கு தங்கம் வழங்கும் விழாவில் 1000 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 21 இலட்சத்து 75,000 ஆயிரம் மதிப்பில் மாநிலங்களவை உறுப்பினர் திரு.கே.ஆர்.அர்ஜூணன் அவர்கள், பாராளுமன்ற உறுப்பினர் திரு.சி.கோபாலகிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா, இ.ஆ.ப., அவர்கள் வழங்கி பேசியதாவது,

           பெரும்பாலான சமூகங்களில் திருமணத்தின் போது தங்கம் “திருமாங்கல்யம்” அணிவது ஒரு பழமையான கலாச்சாரமாகும். பெற்றோர்கள் தங்கள் பழக்க வழங்கங்கள் மற்றும் கலாச்சார பின்னனியில் திருமண நிகழ்வுகளை கொண்டாடுகிறார்கள. இருப்பினும் பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவுகளிலிருந்து பெற்றோர்கள் தங்கள் மகள்களின் திருமணத்திற்கான செலவினங்களை செய்ய முடியாமல் துன்பப்படுகின்றனர்.

மறைந்த  முன்னாள் முதலமைச்சர் அம்மா அவர்களால் பெண்களின் நலனுக்காக கொண்டு வரப்பட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அரசு  சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. அதில் தமிழக அரசு பெற்றோர்களுக்கு உதவும் எண்ணத்தில் மகள்களுக்கு கல்வி கற்கவும், திருமணம் செய்து கொடுக்க ஏழை பெற்றோரின் மகள்கள், ஆதரவற்ற பெண்கள், விதவைகளை மீண்டும் திருமணம் செய்து கொள்ளுதல், விதவைகள் மகள் திருமணம் ஆகிய திருமண திட்டங்கள் அரசால் நன்கு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

              மேற்படி  நீலகிரி மாவட்டத்தில் திருமண நிதியுதவி தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த 7 ஆண்டுகளில் 11498 பயனாளிகளுக்கு 52.61 கிலோ தங்கம் மற்றும் ரூ.39.22 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது எனவே அரசின் இந்த உன்னத திட்டங்களை அனைவரும் தெரிந்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

             அதனை தொடர்ந்து 2018-2019 ஆம் ஆண்டிற்கு முதற்கட்டமாக பட்டப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.50,000/- வீதம் 687 பயனாளிகளுக்கு ரூ.3,43,50,000/- மற்றும் பட்டயப்படிப்பு பயின்ற ஒரு பெண்ணிற்கு திருமண நிதியுதவியாக ரூ.25,000/- வீதம் 313 பயனாளிகளுக்கு ரூ.78,25,0000/-மும் ஆக மொத்தம் 1000 பயனாளிகளுக்கு ரூ.4,21,75,000/- நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கத்தினையும், கருணை அடிப்படையில் வருவாய் துறையில் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு பணிநியமன ஆணைகளையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.

              இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி.கண்ணகி பாக்கியநாதன்,இ.ஆ.ப.,(ஓய்வு), குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.சாந்திராமு அவர்கள், தலைவர், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் இணையம் திரு.அ.மில்லர், தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்புத்திட்டம் திரு.முருகன், மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் திருமதி.புஷ்பலதா அவர்கள், ,அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.