2018ஆம் வருடத்தின் இறுதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.12.2018) தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி.கண்ணகி பாக்கியநாதன்,இ.ஆ.ப.,(ஓய்வு),அவர்கள் முன்னிலையில்,
மாவட்ட ஆட்சியர் திருமதி ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

 

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (31.12.2018) மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆப., அவர்கள் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 135 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது. 


பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., அவர்களிடம் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.


இம்மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் உதகை வட்டம் மசினகுடி செம்மநத்தம் ஶ்ரீகுருபத்தியம்மாள் இருளர் சிமெண்ட் உற்பத்தி சங்கத்திற்கு செங்கல் சூளை அமைக்க இரண்டாம் கட்டமாக ரூ.3,00,000/-த்திற்கான காசோலையினை திருமதி.ஜெ.இன்னசென்ட்திவ்யா,இ.ஆ.ப., மற்றும் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் திருமதி.கண்ணகி பாக்கியநாதன்,இ.ஆ.ப.,(ஓய்வு), அவர்கள் ஆகியோர் வழங்கினார்கள்.


பின்னர் பொக்காபுரம் பகுதியை சேர்ந்த பொக்காபுரம் மாரியம்மன் இயற்கை பண்ணை (இருளர்) விவசாயிகள் சங்கத்திற்கு வீட்டுத்தோட்டம் அமைக்க ரூ.2,50,000/-த்திற்கான காசோலையினையும், கூடலூர் வட்டம் ஏழுமுறம் பகுதியை சேர்ந்த இப்பிமாலா பணியர் முன்னேற்ற சங்கத்திற்கு பாக்கு மட்டை தயாரிக்க முதற்கட்டமாக ரூ.2,00,000/-த்திற்கான காசோலையினையும், உதகையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளி சந்திரசேகர் என்பவருக்கு மாதந்தோறும் ரூ.1000/-உதவித்தொகை பெறுவதற்கான ஆணையையும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்.


இக்கூட்டத்தில் தனித்துணை ஆட்சிய
ர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.முருகன், மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.பாஸ்கரன், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் திரு.மணிவேலன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.