2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்

எதிர்வரும் 2019 நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கு எண்ணும் மையத்தினை இன்று நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உடன் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. தெ. சண்முகபிரியா, மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. செல்வராஜ், உதகை கோட்டாட்சியர் திரு. சுரேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் உள்ளனர்.