பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு அங்காடியில் இன்று தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு திட்டத்தினை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. சாந்தி ராமு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகையினை வழங்கினார்.

உடன் சார் ஆட்சியர் திரு. ரஞ்சித் சிங் இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு. ப. செல்வராஜ், நீலகிரி மண்டல இணைப்பதிவாளர் திரு. ப. லோகநாதன் உட்பட அரசுதுறை அலுவலர்கள் பலர் உள்ளனர்