பள்ளிக் கல்வித்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் இன்று (07.01.2019) பள்ளிக் கல்வித்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

         நீலகிரி மாவட்டம் உதகை இரயில் நிலையத்தில் இன்று (07.01.2019) பள்ளிக் கல்வித்துறை சார்பில் சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தின கல்லூரி மாணவியர்களின் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி கூறியதாவது,

        கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்துவதால்  கண்பார்வை பாதிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி, நரம்புத்தளர்ச்சி, கை,கால் நடுக்கம், பசியின்மை, நினைவாற்றல் குறைவு, மலட்டுத்தன்மை, குடும்பத்தில் பிரச்சனை, உடல் உறுப்புகள் செயல் இழத்தல், ஜீரணசக்தி குறைவு போன்ற உடல் அளவிலும் மனதளவிலும் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகிறார்கள். எனவே கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களிலிருந்து விடுபட்டு உடலையும், மனதையும் காக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் எவ்வித பிரச்சனையும் இன்றி நல்ல நிலையில் இருக்க முடியும். இப் விழிப்புணர்வு பேரணியின் நோக்கமானது பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்களிடையே கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதாகும். மேலும் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

        இப்பேரணியில் செயிண்ட் ஜோசப் ஆசிரியர் பயிற்சி பள்ளி மற்றும் எமரால்டு பெண்கள் கல்லூரியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட மாணவிகள் கள்ளச்சாராயம் மற்றும் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இப்பேரணி உதகை இரயில் நிலையத்திலிருந்து கமர்சியல் சாலை வழியாக பிரிக்ஸ் பள்ளியில் நிறைவடைந்தது.

            இந்நிகழ்ச்சியில் தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திரு.முருகன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.நசுருதீன், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் திரு.பிரகாஷ், திரு.அர்ஜூணன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.