123-வது மலர்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் இன்று (09.01.2019) வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் 123-வது மலர்காட்சியை முன்னிட்டு மலர் நாற்றுகள் நடும் பணியினை குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சாந்தி (அ) ராமு அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து கூறியதாவது,

வரும் 2019 மே மாதம் நடைபெறவிருக்கும் 123-வது மலர்காட்சியை முன்னிட்டு பூங்காவின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாத்திகளில் வண்ண மலர்ச்செடிகளை கொண்டு மலர் பாத்திகளை அமைக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனை கருத்திற்கொண்டு நீண்ட வாழ்நாட்களை கொண்ட சால்வியா, டெல்பீனியம் மற்றும் பென்ஸ்டிமன் போன்ற மலர் நாற்றுகள் நடும் பணி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு சிறப்பம்சமாக சைக்லமன், சினரேரியா, ஜெரோனியம், கிலக்ஸ்சீனியா, ரெனன்கிளாஸ் பல புதிய ரக ஆர்னமென்டல்கேல், ஓரியண்டல்லில்லி, ஆசியாடிக்லில்லி, டேலியாக்கள்,மற்றும்இன்காமேரிகோல்டு,பிகோனியா,கேன்டீடப்ட்,டெல்பீனியம்,பிரன்ச்மேரிகோல்டு,பேன்சி, பெட்டுனியா, பிளாக்ஸ்,பிரிமுலா, ஜினியா, ஸ்டாக், கேல், வெர்பினா,சன்பிளவர்,சிலோசியா,ஆன்டிரைனம்,வயோலா, லைமோனியம், நிமேசியா போன்ற 230 வகையான விதைகள் ஜப்பான்,அமெரிக்கா,ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து பெறப்பட்டு மலர்செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு பூங்காவில் பல்வேறு பகுதிகளில் 5 இலட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதைத்தவிர இவ்வாண்டு மலர்காட்சி அரங்கினுள் 15,000 பல வண்ண மலர்செடிகள் அடுக்கி வைக்க விரிவான ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது. மேலும் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற 122 வது மலர் காட்சிக்கு  28.7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்தனர்.  இந்த ஆண்டு நீலகிரிக்கு 150 வது ஆண்டாகும். எனவே கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் திரு.சிவசுப்ரமணிய சாம்ராஜ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.