காவல்துறை – பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள்

நீலகிரி மாவட்டம் காவல்துறை மற்றும் பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில் இன்று புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை – பொதுமக்களுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது .

போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ஜெ. இன்ன சென்ட் திவ்யா, மாவட்டகாவல் கண்காணிப்பாளர் திருமதி. சண்முகபிரியா ஆகியோர் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினர்.

சிறப்பு விருந்தினருக்குக்கான கேடயத்தை நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சி தலைவருக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.