சுற்றுலா துறை சார்பாக அரசு தாவரவியல் பூங்காவில் பொங்கல் விழா மாவட்ட ஆட்சி தலைவர் தொடங்கி வைத்தார்

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் சுற்றுலா துறை சார்பாக பொங்கல் விழா நடைபெறுகிறது.

பொங்கல் விழாவை நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விளையாட்டு போட்டிகளிலும் கலந்துகொண்டார்.

இந்நிகழ்ச்சியில் தோட்ட கலை துறை இணை இயக்குனர், சுற்றுலா துறை அலுவலர், அரசு தாவரவியல் பூங்கா ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.