ரூ.3 கோடியே 83 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள்

நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி பகுதிகளில் இன்று (24.01.2019) மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதகை நகராட்சி சார்பில் ரூ.3 கோடியே 83 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை
மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா.இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நீலகிரி மாவட்டம் இத்தலார் ஊராட்சிக்குட்பட்ட புதுஹட்டி முதல் துளித்தலை மற்றும் பீ.மணியட்டி வரை பிரதான் மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.294.74 இலட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட சாலை பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.18.75 இலட்சம் மதிப்பில் பேலிதளா முதல் இந்திரா நகர் வரை போடப்பட்டு வரும் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை பணியினையும், சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.1.00 இலட்சம் மதிப்பில் பேலிதளாவில் முடிக்கப்பட்ட கான்கிரீட் நடைமேடை மற்றும் ரூ.0.60 மதிப்பில் கட்டப்பட்டு வரும் தனிநபர் இல்ல கழிப்பறைகளையும், இத்தலார் ஊராட்சி விஓசி நகரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.5.00 இலட்சம் மதிப்பில் நடைபெற்று வரும் கால்வாய் தூர்வாரும் பணியினையும், முள்ளிகூர் ஊராட்சிக்குட்பட்ட நேருகண்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.375 இலட்சம் மதிப்பில் போடப்பட்டு வரும் மற்றும் மேம்படுத்தப்பட்ட சாலை பணியினையும், முள்ளிக்கூர் ஊராட்சிக்குட்பட்ட இன்பசாகர் நகரில் ரூ.4.90 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சுற்றுச்சுவர் பணியினையும், முள்ளிக்கூரில் ரூ.30.00 இலட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற்பயிற்சி மையத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.00 இலட்சம் மதிப்பில் முள்ளிகூர் ஊராட்சிக்குட்பட்ட புதூர் முதல் அணிக்காடு வரை சாலை அமைக்கும் பணியினையும், உதகை நகராட்சிக்குட்பட்ட டேவிஸ்டேல் பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6.00 இலட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணியினையும், தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.4.00 இலட்சம் மதிப்பில் சர்ச்சில் பகுதியில் நடைபாதையுடன் கூடிய தடுப்பு சுவர் அமைக்கும் பணியினையும் ஆக மொத்தம் ரூ.3 கோடியே 83 இலட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் சம்மந்தப்பட்ட துறை அலுவலரிடம் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு அறிவுறுத்தினார். 


இந்த ஆய்வின் போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, உதகை நகராட்சி பொறியாளர் திரு.ரவி, உதகை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.