சூப்பர் டீலக்ஸ்” படத்தின் விநியோக உரிமையை பெற்ற YNOTX

விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சமந்தா அக்கினேனி, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன்
நடிப்பில், தேசிய விருது வென்ற இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா
இயக்கத்தில் உருவாகியுள்ள “சூப்பர் டிலக்ஸ்” படத்தை தனது முதல் விநியோகத்
திரைப்படமாக அறிவிப்பதில் “YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன்”
பெருமிதம் கொள்கிறது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா எழுதி இயக்கியுள்ள இப்படத்தை அவரது
தயாரிப்பு நிறுவனமான டைலர் டர்டன் அண்ட் கினோ ஃபிஸ்ட் நிறுவனத்துடன்
இணைந்து ஈஸ்ட்வெஸ்ட் ட்ரீம் ஒர்க் எண்டர்டெயின்மெண்ட் & அல்கேமி விஷன்
ஒர்க்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

YNOTX மார்கெட்டிங் அண்ட் டிஸ்ட்ரிபியூஷன் குழுவின் அங்கமான தயாரிப்பாளர்
சசிகாந்த் கூறுகையில், “சூப்பர் டிலக்ஸ்” படத்தின் மூலம் YNOTX, திரைப்பட
விநியோக உலகத்தில் தடம் பதிப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

இப்படம் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு முக்கிய இடம் பெரும், மேலும் தமிழ்
சினிமாவில் ஒரு புதிய பாதையையும் உருவாக்கும் என்பதில் எங்களுக்கு
நம்பிக்கை உள்ளது. இப்படம் வர்த்தக ரீதியாக உலகம் முழுவதும் மிகப்பெரிய
வெற்றி அடையும்.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவின்
இயக்கத்திறமையும், கதையின் மகத்துவமும் இப்படத்தை மென்மெலும்
மெருகடைய செய்துள்ளது. கண்டிப்பாக இப்படம் அனைத்து ரசிகர்களின்
பாராட்டையும் பெரும்.