மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா உதகை ஜோசப் பள்ளியில் வாக்களித்தார்

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 1610 வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு துவங்கியது. மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் உதகை ஜோசப் பள்ளியில் வாக்களித்தார்.

நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் உள்ள உதகை, குன்னூர் , கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய 6 சட்ட மன்றங்களிலுள்ள 1610 வாக்குச் சாவடிகளில் வாக்கு பதிவு நடை பெற்று வருகிறது. உதகையில் உள்ள புனித ஜோசப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் தனது வாக்கை பதிவு செய்தார்.

பொது மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வந்து வாக்ககளித்து செல்கின்றனர். குறிப்பாக முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள ஆதிவாசி கிராமங்களில் உற்சாகமாக இருளர், பனியர், குரும்பர் இன ஆதிவாசி மக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மலை மாவட்ட மக்கள் வாக்களிக்க குவிந்து வருவதால் வாக்குசாவடிகளில் கூட்டம் அதிகரித்து காணபடுகிறது.