கலைமாமணி டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இன்னிசை கச்சேரி

 

#படுகமொழிபாடல் | #BadugaSong | #Nilgiris

உதகை கோடை விழாவை முன்னிட்டு 18.5.2019 அன்று பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் கலைமாமணி டாக்டர். நித்யஸ்ரீ மகாதேவன் அவர்களின் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தவர் டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியாளர் திருமதி.சாந்தா தியாகராஜன் அவர்கள்.

மூன்று மணி நேரம் நடைப்பெற்ற இசை கச்சேரியில் திருமதி . சாந்தா தியாகராஜன் அவர்கள் எழுதிய படுகமொழி பாடலுக்கு இசையமைத்து மேடையில் பாடினார் நித்யஸ்ரீ மகாதேவன். இந்த பாடல் அனைவரின் வரவேற்பையும் பெற்றது. திருமதி. சாந்தா தியாகராஜன் கர்நாடக இசை மேதை டி.கே.பட்டம்மாள் அவர்களைப் பற்றி புத்தகமும் எழுதியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

இசை கச்சேரி ஆரம்பிக்கும் முன் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்ட் திவ்யா அவர்கள் நித்யஸ்ரீ மகாதேவன் அவர்கள் உட்பட இசைக்குழுவினர் அனைவருக்கும் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.