முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்

உதகையில் முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பூரண கும்பம் மற்றும் இனிப்புகளை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றது மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது…

தமிழகததில் கோடைவிடுமுறை முடிந்து இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கபட்டுள்ளன. நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் பள்ளிகளுக்கு இன்று காலை ஆர்வத்துடன் சென்ற நிலையில் உதகையில் உள்ள அரசு உதவி பெறும் பெண்கள் மேல் நிலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கபட்டது. முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு பன்னீர் தெளித்து வரவேற்பு அளிக்கபட்டது.

அப்போது சரஸ்வதி வேடமிட்ட ஆசிரியை ஒருவர் மாணவிகளை வரவேற்று ஆசீர்வாதம் செய்து வகுப்பறைகளுக்கு அனுப்பி வைத்தார். அவரின் இருபுறமும் மயில் மற்றும் முயல் வேடமிட்ட மாணவிகள் நடனம் ஆடியவாறு இனிப்புகளை வழங்கி உற்சாகத்துடன் வரவேற்றனர்.

அதனை கண்டு மாணவிகள் நெகிழ்ச்சியுடன் தங்களது வகுப்பறைகளுக்கு சென்றனர். ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கு இடையே நல்லுறவு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடத்தபட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதனிடையே பள்ளி மாணவிகள் முக்கிய தலைவர்களான அப்துல்காலாம், திருவள்ளுவர், மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் வேடமிட்டு மாணவிகள் மத்தியில் பேசினர்.