வாகனங்களில் குப்பை தொட்டி

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் கழிவுகளை அதிக அளவில் வீசி செல்வதாலும், மாவட்டத்தில் உள்ள வணிக நிறுவனங்கள் மறைமுகமாக பிளாஸ்டிக்கை பயன்படுத்தி வருவதாலும் பிளாஸ்டிக் புழக்கம் தொடர்கிறது.

அதனை கண்காணிக்காத அரசு அதிகாரிகள் தற்போது நீலகிரி மாவட்டத்தில் இயங்கும் அரசு பேருந்துகள், தனியார் மினிபேருந்துகள், சுற்றுலா வாகனங்களினுள் குப்பை தொட்டிகளை பொறுத்தி பிளாஸ்டிக் குப்பைகளை சேகரிக்குமாறு நீலகிரி மாவட்ட ஆட்சிதலைவர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவை மாவட்ட வாட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.