சுற்றுசூழல் பாதுகாப்பதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி – பேரணி

உதகையில் 7 மாநிலங்களை சார்ந்த வேளாண் பொறியியல் மாணவர்களுக்கு சுற்றுசூழல் பாதுகாப்பதை குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைப்பெற்றது.

ஆண்டுதோரும் ஜீன் 5-ம் தேதி உலக சுற்றுசூழல் தினம் கடைப்பிடிக்கபடுகிறது. இந்தாண்டிற்கான சுற்றுலா சூழல் தினம் இன்று கடைப்பிடிக்கபடுவதை அடுத்து உதகையில் உள்ள மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி நிலையத்தில் வேளாண் பொறியியல் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நடைப்பெற்றது.

இதில் ஆந்திரா, குஜராத், மத்தியபிரதேசம், ஒரிஷா, மகாராஷ்ட்ரா, உத்தரபிரதேசம் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட 7 மாநிலங்களை சார்ந்த 63 வேளாண் பொறியியல்  மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

விழிப்புணர்வு நிகழச்;சியில் சுற்றுசூழல் எவ்வாறு மாசடைகிறது, அவ்வாறு சுற்றுசூழல் மாசடைவதை எவ்வாறு தடுக்க வேண்டும் என்பதை குறித்து மாணவர்களுக்கு விளக்கபட்டது.   அத்துடன் தற்போதயை காலநிலை மாற்றத்திற்க்கு ஏற்றவாறு சுற்றுசூழலை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சிகளும் அளிக்கபடுகிறது.

பின்னர் சுற்றுசூழலை பாதுகாப்பது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு மாணவர்கள் பேரணியில் கலந்துகொண்டனர். மத்திய மண் மற்றும் நீர் வள ஆராய்ச்சி நிலையத்தில் தொடங்கிய பேரணியானது படகு இல்லத்தில் முடிவடைந்தது