கிணற்றில் தவறி விழுந்த கடாமன் 3 மணி நேரத்திற்க்கு பிறகு உயிருடன் மீட்பு

உதகை அருகே கிணற்றில் தவறி விழுந்த கடாமன் 3 மணி நேரத்திற்க்கு பிறகு உயிருடன் மீட்பு. திறந்த வெளியில் அமைந்துள்ள கிணறுகளை வேலி அமைத்து பாதுக்காக வனத்துறை வேண்டுகோள்

நீலகிரி மாவட்டம் சுமார் 60 சதவிகிதம் வனப்பகுதிகளை கொண்டதாகும். இந்த வனப்பகுதியில் யானை, புலி, சிறுத்தை, காட்டெருமை, கரடி, மற்றும் மான் உள்ளிட்ட வன விலங்குகள் அதிகமாக உள்ளன. குறிப்பாக சமீப காலமாக சிறுத்தை, கரடி, காட்டெருமை மற்றும் மான்கள் உணவு மற்றும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வருவது வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு வரும் வனவிலங்குகள் பாதைகளை மறந்து குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து அதற்கு உயிரிழப்பு ஏற்படுவதுடன் மனித விலங்கு மோதலும் ஏற்படுகிறது.

இந்நிலையில் உதகையை அடுத்துள்ள காந்தள் பகுதியில் ஆவின் நிர்வாகத்திற்கு சொந்தமான திறந்த வெளி கிணற்றில் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சென்று பார்த்த போது கடா மான் கிணற்றில  விழுந்திருப்பதை கண்டு வனத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்க்கு வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தண்ணீரில் உயிருக்கு போரடிக்கொண்டிருந்து மானை பத்திரமாக மீட்டு வனப்பகுதிகுள் அனுப்பி வைத்தனர்.

குறிப்பாக வனபகுதியை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள திறந்த வெளி கிணற்றினை பாதுகாப்பாக மூடி வைக்கவும், அதனை சுற்றி வேலி அமைக்கவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.