ஸ்வீப் புளு மவுண்டன் திட்டம் – அரசு அதிகாரிகளுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர்

உதகை நகராட்சி சந்தை சுகாதாரமில்லாமல் இருப்பதால் சந்தையை தற்காலிகமாக மூடி கடை நடத்துபவர்களே சந்தையை தூய்மைபடுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு. ஸ்வீப் புளு மவுண்டன் திட்டம் இன்று அறிமுகம் செய்து அரசு அதிகாரிகளுடன் தூய்மை பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் சுகாதாரமில்லாமல் செயல்பட்ட 3 இறைச்சி கடைகளை மூடி சீல் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

நீலகிரி மாவட்டத்தினை தூய்மையான மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகபடுத்தி வருகிறது. இதன் படி இன்று உதகையில் ஸ்வீட் புளு மவுண்டன் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார். மாவட்டத்தில் அசுத்தம் நிறைந்த பகுதியை வாரத்திற்கு ஒரு முறை தேர்வு செய்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து அப்பகுதியை தூய்மை செய்யவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். இதன் படி இன்று உதகை நகராட்சி சந்தையை மாவட்ட ஆட்சியர் தலைமையில் தூய்மை செய்யதனர்.

நகராட்சி சந்தையை தூய்மையாக வைத்து கொள்ள கடைகாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் துண்டு பிரசுரங்களை வழங்கி தூய்மை பணியில் ஈடுபட்டார். அப்போது இறைச்சி கடை பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்ட போது அங்கு அசுத்தம் அதிகமாகவும், சுகாராமில்லாமல் இருநத்தால் அப்பகுதியில் உள்ள கடைகளுக்கு அபராதம் விதித்தார்.

பின்னார் உதகை நாகராட்சி சந்தை மிகவும் சுகாதாரமில்லாமல் அசுத்தம் நிறைந்து இருப்பதால் தற்காலிகமாக சந்தையை மூடி அனைத்து கடை உரிமையாளர்களே சந்தையை தூய்மை செய்யவும் உத்தவிட்டார். மேலும் இனிவரும் நாட்களில் வாரம்தோறும் வியாழகிழமைகளில் 2 மணி நேரம் நகராட்சி சந்தையை மூடி கடை நடத்துபவர்கள் மூலம் தூய்மை செய்த பின்பு தான் கடைகளை திறக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

சுகாதாரமில்லாமல் செயல்பட்ட 3 இறைச்சி கடைகளை மூடி சீல் வைத்தும், மேலும் சுகாதாரமில்லாமல் செயல்படும் கடைகளை ஆய்வு செய்யவும் உத்தரவிட்டார்.