நீலகிரி மாவட்டத்தில் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட எல்லநள்ளி பகுதியில் இன்று (19.07.2019) பேரூராட்சியின் சார்பாக சுவச்பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் திரைப்பட நடிகர் திரு.விவேக் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சிக்குட்பட்ட எல்லநள்ளி பகுதியில் இன்று (19.07.2019) பேரூராட்சியின் சார்பாக சுவச்பாரத் மிஷன் திட்டத்தின் கீழ் தூய்மை பணி மற்றும் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப.. அவர்கள் மற்றும் திரைப்பட நடிகர் திரு.விவேக் அவர்கள் ஆகியோர் தொடங்கி வைத்து கூறியதாவது, நீலகிரி மாவட்டம் மிகவும் பசுமை நிறைந்த மாவட்டம் ஆகும். சுற்றுச்சூழலை பாதுகாப்பது சமுதாயத்தில் இன்றைய தலைமுறையினரின் முக்கிய பங்கு ஆகும். நீங்கள் நினைத்தால் தான் வருங்கால சந்ததியினருக்கு நீலகிரியை பசுமை நிறைந்த மாவட்டமாகவும், சுற்றுலா தலமாகவும் பாதுகாப்பாக வைத்திருக்க முடியும்.

மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தனிதனியாக பிரித்து, தூய்மை காவலரிடம் கொடுத்து மக்கும் குப்பைகளை வீட்டு தோட்டத்திற்கு உரமாக்கவும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்து தூய்மை மாவட்டமாக உருவாக்கவும், பிளாஸ்டிக் எரிப்பதை தவிர்த்து புற்று நோயிலிருந்து விடுபடவும், வீட்டுகொரு கழிப்பறை அமைப்பதன் மூலம் நோயில்லா சமுதாயத்தை உருவாக்கவும் முழு சுகாதார தமிழகம் மற்றும் முன்னோடி தமிழகமாக மாற்ற முடியும்.

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்பதன் மூலம் மண்வளம், மாசற்ற காற்று, மழை, நீர் வளம் ஆகியவற்றை பெற முடியும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் திரைப்பட நடிகர் விவேக் அவர்கள் ஆகியோர் தெரிவித்து பள்ளி குழந்தைகளுக்கு மரக்கன்றுகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.பாபு, உதவி இயக்குநர் பேரூராட்சிகள் திருமதி.மனோரஞ்சிதம், உதவி இயக்குநர் ஊராட்சிகள் திரு.சுரேஷ், கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் திரு.நடராஜ், அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்