நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தில்லா நாளாக காவல்துறை அறிவிப்பு.

நீலகிரி மாவட்டத்தில் இன்று விபத்தில்லா நாளாக காவல்துறை அறிவிப்பு. வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வாகன விபத்துகளால் அதிகரித்து வரும் உயிரிழப்பை தடுக்கும் நடவடிக்கையாக சென்னை உயர்நீதிமன்றம் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என உத்தரவிட்டது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தபட்டு வருகிறது.

இன்று நீலகிரி மாவட்டம் விபத்தில்லா நாளாக கடைப்பிடிக்கபடுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் தெரிவித்தார். இன்று விபத்தில்லா நாள் என்பதால் நீலகிரி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர வாகன சோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகைளை நடத்தி வருகின்றனர். குறிப்பாக உதகை நகர பகுதிகளில் காவல்துறையினர் உள்ளூர் வாகன ஓட்டிகள் மற்றும் சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு குறித்தும், வாகனம் ஓட்டும் போது செல்போன் பேச கூடாது, சீட் பெல்ட் அணிய வேண்டும், இருசக்கர வானத்தில் வருபவர்கள் இவருவராக இருந்தாலும் தலைகவசம் அணிய வேண்டும்,மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்க கூடாது உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பிரசுரங்கள் வழங்கபட்டது. மேலும் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதமும், தலைகவசம் அணியாமல் வாகனத்தின் பின் அமர்ந்து பயணிப்பவருக்கு 100 ரூபாய்; அபராதம் என மொத்தம் 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தலைகவசம் மற்றுமு; சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.

மேலும் இரு சக்கர வாகனத்தில் தலைகவசம் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு 500 ரூபாய் அபராதமும், தலைகவசம் அணியாமல் வாகனத்தின் பின் அமர்ந்து பயணிப்பவருக்கு 100 ரூபாய்; அபராதம் என மொத்தம் 600 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர். மேலும் தலைகவசம் மற்றுமு; சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தனர்.