ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து

ஊட்டி – கூடலூர் தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. பல இடங்களில் சாலையை அகளப்படுத்தியும் மழை நீர் வடிகால் கல்வெட்டுகள் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. ஊட்டி ஹில் பங்க் பகுதியில் மழை நீர் வடிகால் குழாய் சாலையின் குறுக்கே அமைக்கும் பணி செய்யப்பட்டு முழுமையாக முடிக்கப்படாமல் இருப்பதால் சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் ஏற்பட்டு விபத்துகள் நடைபெறும் அபாயம் உள்ளது. 

ஊட்டியில் மழையும் பெய்து வருவதால் சாலை சேறும் சகதியுமாக இருக்கிறது. அதனால் இப்பள்ளத்தில் வாகனங்கள் மாட்டிக் கொள்கின்றன. தவிர பள்ளத்தில் நேற்று இரவு ஆட்டோ ஒன்றும் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது . இன்று காலை பள்ளத்தில் இருந்து ஆட்டோ மீட்கப்பட்டது. இது குறித்து பொதுமக்கள் கூறும்போது. சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். மற்றும் மழைக்காலமாக இருப்பதால் பள்ளங்களை சரியாக மூடி விபத்து ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும். தவிர வாகன ஓட்டிகளும் சாலைப் பணி நடைபெறுவதால் கவனமுடன் வாகனங்களை ஓட்டிச் சென்றால் விபத்துகளை தவிர்க்கலாம் என்று கூறுகின்றனர்.