மருந்தாக்கியல் ஆராய்ச்சியின் முயற்சியும் முன்னேற்றமும் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு…

மருந்தாக்கியல் ஆராய்ச்சியின் முயற்சியும் முன்னேற்றமும் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு….இந்தியாவில் உள்ள புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு மருந்துகள் கண்டு பிடிப்பது குறித்த மருந்தாக்கியல் ஆராய்ச்சியின் முயற்சியும் முன்னேற்றமும் குறித்த இந்தியா, ஜோடான் மற்றும் வெஸ்ட் இண்டிஸ் ஆகிய நாடுகளை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றுள்ள இரண்டு நாள் கருத்தரங்கு இன்று நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் துவங்கியது…

நீலகிரி மாவட்டம் உதகையில் இயங்கி வரும் ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்களுக்கு இந்தியாவில் மருந்துகள் கண்டுபிடிப்பது குறித்த இரண்டு நாட்கள் கருத்தரங்கு கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் தலைமையில் இன்று துவங்கியது.

கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜெவகர் விளக்க உரையாற்றினார் இந்த கருத்தரங்கில் இந்தியாவை சேர்ந்த 7 ஆராய்ச்சியாளர்களும், ஜோடான் நாட்டை சேர்ந்த 4 ஆராய்ச்சியாளர்களும் மற்றும் வெஸ்டிண்டிஸ் நாட்டை சேர்ந்த 3 ஆராய்ச்சியாளர்களும் மொத்தம் 14 ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்று ஆராய்ச்சி செய்து அதன் ஆய்வுகள் குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றன . மேலும் கோவை, மைசூர் போன்ற பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்ப்பட்ட மருந்தாக்கியல் கல்லூரி மாணவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்றுள்ளனர். விழாவில் நிகழ்சி பற்றி குறுந்தகடு வெளியிடப்பட்டது.