மாற்று திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

மாற்று திறன் மாணவர்களுக்கு இலவச மருத்துவ முகாம் உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டத்தின் 2019 – 20ம் கல்வியாண்டில் உள்ளடங்கிய கல்வி திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட மாற்று திறன் கொண்ட மாணவர்களுக்கான சிறப்பு இலவச மருத்துவ முகாம் ஊட்டி ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் பள்ளியில் 26.7.2019 அன்று நடைபெற்றது. முகாமை உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் குமார் துவக்கிவைத்தார். இம்முகாமில் 182 மாற்றுத்திறன் மாணவர்கள் கலந்து கொண்டனர். அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பரிசோதனை மேற்கொண்டனர்