உதகையில் நடைபெற்ற பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி

உதகையில் நடைபெற்ற பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது….உதகையில் நீலகிரி மாவட்ட பழங்கால கார்கள்  பாதுப்பு சங்கம் சார்பாக 15-வது பழங்கால கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்காட்சி இன்று நடைப்பெற்றது.   முன்னதாக உதகையில் உள்ள தமிழக அரசு விருந்தினர் மாளிகை முன்பு தொடங்கிய  பழங்கால கார் கள் மற்றும் இருசக்கர வாகனங்களின் அணிவகுப்பை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இக்கண்காட்சியில் 1932 முதல் 1965 ஆம் ஆண்டு வரை உற்பத்தி செய்யப்பட்ட 80 பழங்கால கார்களும், 40 இருசக்கர வாகனங்களும் கலந்து கொண்டன. தமிழகம் அரசு விருந்தினர் மாளிகைளில் இருந்து துவங்கி ஊர்வலமானது நகரின் முக்கிய வீதிகள் வழியாக சாரல்  மழையிலும் அணிவகுத்து சென்றன.

அனைத்து கார்களும் மற்றும் இருசக்கர வாகனங்களும் ஏடிசி அருகே உள்ள மைதானத்தில் சுற்றுலா பயணிகள் மற்றும்  பொதுமக்கள் கண்டு ரசிப்பதற்காக நிறுத்தி வைக்கப்பட்டன.

காட்சிக்கு நிறுத்தி வைக்கபட்ட ஆஸ்டின், டார்ஐ; பிரதர்ஸ், பிளேமவுத்;, பென்ஸ், ஹில்மேன் உள்ளிட்ட பல்வேறு வகையான பழங்கால கார்களும், லேம்பர்டா, ரோட் கிங், நார்டன், ஜாவா உள்ளிட்ட இருசக்கர வாகனங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருந்தது. பழங்கால கார்களை அழிவிலிருந்து பாதுகாக்கும் வகையில் இக்கண்காட்சி நடத்தப்பட்டது குறிப்பிடதக்கது.