காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 11 அஞ்சல் உறைகள் வெளியிடபட உள்ளன

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு 11 அஞ்சல் உறைகள் வெளியிடபட உள்ளன.    இன்று நீலகிரி மாவட்டம் உதகை தலைமை அஞ்சல் அலுவலகத்தில் மேற்கு மண்டல அஞ்சல் துறை இயக்குனர் அவர்கள் தலைமையில் 9வது அஞ்சல் உறை வெளியிடப்பட்டது.   இந்த அஞ்சல் உறை தீண்டாமை வலியுறுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளி மாணவ – மாணவியர், அஞ்சல் துறை அதிகாரிகள், அலுவலர்கள் கலந்துகொண்டனர்.  இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும் தான் முதல்முறையாக 11 அஞ்சல் உறை வெளியிடப்பட்டுள்ளது. 11வது அஞ்சல் உறை சென்னையில் வெளியிடப்படவுள்ளது.