உதகையில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம்

உதகையில் நீலகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணை குழு சார்பாக மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி திரு. வடமலை அவர்கள் தலைமையில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் மகிளா நீதிமன்ற நீதிபதி திரு. முரளிதரன், சார்பு நீதிபதி திரு. சுரேஷ் குமார், DRDA PD திரு.பாபு, உதகை கோட்டாட்சியர் திரு. சுரேஷ் பாண்டியன், கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, JDHS மரு. ஹிரியன் ரவிகுமார், வழக்கறிஞர்கள் மற்றும் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.