நீலகிரி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கபட்டமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று (11.8.2019) கூடலூர் பகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

 இன்று (12.8.2019) உதகை அருகே குருத்துகுளி கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த இரு பெண்களின் குடும்பத்தினரை ஆறுதல் கூறினார். பின்னர் வெள்ளத்தால் பாதிக்கபட்ட விளைநிலங்களை பார்வையிட்டு எமரால்டு பகுதியில் முகாமில் தங்கவைக்கபட்டுள்ள 200ற்கும் மேற்பட்டோரை சந்தித்து ஆறுதல் கூறினார்.