வருவாய்த்துறை அமைச்சர் திரு RB.உதயகுமார் அவர்கள் பருவமழை பாதிப்பால் பாதிக்கபட்ட நிலங்களை பார்வையிட்டனர்.

நீலகிரி மாவட்டம் உதகை காந்தள் ஓம் பிரகாஷ் பள்ளியில் பருவமழை பாதிப்பால் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும் மற்றும் பாலாடா பகுதியில் பருவமழை பாதிப்பால் பாதிக்கபட்ட நிலங்களை வருவாய்த்துறை மற்றும் தொழில் நுட்ப துறை அமைச்சர் திரு RB.உதயகுமார் அவர்கள் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சி தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்கள். குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் திரு சாந்தி இராமு உட்பட அரசு துறை அலுவலர்கள் பலரும் பார்வையிட்டனர்.