மாயார்,மசினகுடி,தெங்குமராடா பகுதிகளுக்கு எச்சரிக்கை!!!

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது இதன் காரணமணமாக மாவட்டத்தில் உள்ள அணைத்து அணைகளும் நிரம்பி வருகிறது.

பைக்காரா அணையானது முழு கொள்ளளவை எட்டியுள்ளதை தொடர்ந்து அணையின் பாதுகாப்பு கருதி இன்று (05.09.2019) நீர் வெளியேற்றம் செய்யப்படுகிறது.வெளியேற்றம் செய்யபடும் நீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது . மாயார் மசினகுடி தெங்குமராடா பகுதிகளில் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஜெ.இன்னசென்ட் திவ்யா இ.ஆ.ப அவர்கள் தெரிவித்துள்ளார்