அரசு போக்குவரத்து இயக்கும் ஓட்டுனர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.

ஊட்டி , காந்தள் பகுதியில் சாலைகளின் இரு ஓரங்களிலும் வாகனங்கள் நிறுத்தி வைப்பதால் அந்த வழித்தடங்களில் பேருந்தை இயக்க முடியவில்லை என்றும் அதனால் காலதாமதமாகிறது, அதன் காரணமாக நாங்கள் அபராதம் செலுத்துகிறோம்.

  என அரசு போக்குவரத்து காந்தள் வழித்தடத்தில் இயக்கும் ஓட்டுனர்கள் மறியலில் ஈடுப்பட்டனர்.  அதனால் சுமார் ஒரு மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது .

 உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் சமரசம் செய்து போக்குவரத்தை சரி செய்தனர் .அதானால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.