ஆண் குழந்தை உயிருடன் மீட்பு

உதகை அருகே மஞ்சனக்கொரை வனப்பகுதியில் பிறந்து ஒரு மணி நேரமான அழகான பஞ்சிளம் ஆண் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது  ஊட்டி மஞ்சனக் கொரை வனப் பகுதிக்கு விறகு எடுப்பதற்காக சென்ற பெண்கள் அங்கே புதருக்குள் வீசப்பட்டு கிடந்த அழகான ஆண் குழந்தையை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு , குழந்தையை மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தைக்கு சிகிச்சை தீவிர அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குழந்தையை வனப்பகுதியில் வீசி சென்றது யார், என்ன காரணத்திற்காக வீசி சென்றனர் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.