முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டார்

நீலகிரி மாவட்டம் உதகை அணிக்கொரை பகுதியில் இன்று (23.10.2019) வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை பழங்கள், காய்கறிகள் மற்றும் அழுகும் பொருட்களுக்கான விநியோக தொடர் மேலாண்மை திட்டம் கீழ் அமைக்கப்பட்டுள்ள முதன்மை பதப்படுத்தும் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஜெ.இன்னசென்ட் திவ்யா,இ.ஆ.ப., முன்னிலையில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் வேளாண்மைத்துறை திரு.ககன்தீப் சிங் பேடி,இ.ஆ.ப., அவர்கள் மற்றும் ஆணையர் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை செயலாளர் திரு.எஸ்.ஜே.சிரு,இ.ஆ.ப. அவர்கள் ஆகியோர் பார்வையிட்டனர்.