சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் வகையில் சிறு சேமிப்பு துறை சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழா

மக்களிடையே சிக்கனத்தின் அவசியத்தை உணர்த்தி சேமிக்கும் பழக்கத்தை வளர்க்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 30ம் தேதி உலக சிக்கன நாள் கொண்டாடப்படுகிறது.

   நீலகிரி மாவட்டம் உதகை மலைப்பகுதி மேம்பாட்டு திட்ட அரங்கில் இன்று சிறு சேமிப்பு துறை சார்பில் நடைபெற்ற உலக சிக்கன நாள் விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ஜெ. இன்னசென்னட் திவ்யா அவர்கள் தலைமையில் ஊழல் ஒழிப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.    உலக சிக்கன நாளை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவ – மாணவிகளுக்கு கட்டுரை போட்டி – பேச்சு போட்டி – நாடகம் – நடனம் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது.    இதில் வெற்றிபெற்றவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தவைலர் திருமதி. ஜெ. இன்னசென்னட் திவ்யா அவர்கள் இன்று (30.10.2019) சான்றிதழ்களை வழங்கினார்.